உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு பயிற்சி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலினாள் பாய் முன்னிலையில் நடைபெற்றது.

ஆசிரியர் சண்முகராஜன் வரவேற்புரையாற்றினார். நிலைய அலுவலர் ஜீவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் பொழுது மாணவர்கள், குளம், கிணறு, நீர்வீழ்ச்சி, ஆறு, கடல் போன்ற இடங்களில் குளிக்கும் பொழுது மிக கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். மேலும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது. அதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும் மற்றும் தீயணைப்பு அலுவலகத்திற்கு எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்று விளக்கி பேசினார்.

தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு தீயை எவ்வாறு அணைப்பது, அடுப்பு சிலிண்டரில் எவ்வாறு தீயணைப்பது, ஆபத்து நேரங்களில் முதலுதவி எவ்வாறு செய்ய வேண்டும், பேரிடர் காலங்களில் ஆபத்துக்களில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கி காட்டினார்கள். உதவித் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி உரை கூறினார். உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் முருகேசன் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்
