திருச்சி மாவட்டம் துறையூர் 16-வது வார்டு பகுதியில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் நூறு வீடுகளில் உள்ள வாசல் படிகளை இடித்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. துறையூர் அதிமுக நகர செயலாளரும் 20 வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான அமைதி பாலு என்கிற பாலமுருகவேல் தனது உறவினர்கள் 16 வது வார்டில் உள்ளதாகவும் அவர்களது வீடு வாசல் படி இடிக்காமல் கழிவுநீர் கால்வாய் அமைக்குமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் அவரது வீடு வாசல் படியை இடிக்காமல் பணியை ஒப்பந்தக்காரர்கள் மேற்கொண்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பணி செய்யவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்.
இருபதாவது வார்டு கவுன்சிலராக பொறுப்பில் இருக்கும் அமைதி பாலு எதற்காக தங்களது 16வது வார்டில் தலையிடுகிறார் என்று ஆக்ரோசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு நகர செயலாளர் இதுபோன்று செயலில் ஈடுபடுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் துறையூர் மக்கள் கூறி வருகின்றனர். எனவே தலைமை உடனடியாக அமைதிபாலு என்கிற பாலமுருகவேல் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.













; ?>)
; ?>)
; ?>)