• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

10ஆண்டு காலமாக பூட்டி இருக்கும் மாரியம்மன் கோவில்..,

ByS. அருண்

Aug 7, 2025

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். புத்தணாம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இதனால் விசேஷ தினங்களுக்கு கோயில் திறக்காமல்
பூட்டி இருப்பதாக கூறி அதனை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வலியுறுத்தி பல இடங்களில் கோரிக்கை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதியை சேர்த்த சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக செல்லும் பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புலிவலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், மற்றும் வருவாய் நிர்வாகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டவர் கூட சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் சமரச பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.