புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் ஏழாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி மற்றும் நகர கழக செயலாளர் அழகப்பன் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.