• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்த சிவ பத்மநாதன்..,

ByV. Ramachandran

Aug 7, 2025

ஆலங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் உத்தரவின் பேரில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் அமைத்திட உத்திரவிடப்பட்டது.

ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ஆகும் அதனைச் சுற்றி நெல் விளைவிக்கக்கூடிய நிலங்கள் அதிகம் இருந்தும் எது வரையில் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாமல் இருந்தது பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் உத்தரவு பெறப்பட்டது.

இன்று புதிதாக அறிவிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெற்களை கொண்டு வந்தும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி திமுக சேர்மன் சுதா மோகன்லால் தலைமை வகித்தார்.

நகர துணை செயலாளர் சுதந்திரராஜன் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி நெப்போலியன் லயன்ஸ் கிளப் தலைவர் ஆறுமுகராஜ் முன்னாள்கவுன்சிலர் மோகன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம் வரவேற்று பேசினார். கொள்முதல் நிலையத்தை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் துணை ஆளுநர் டாக்டர் ஜான் சுபாஷ் காமராஜர் சிலை பாதுகாப்பு குழு தலைவர் குமார் ஊர் நிர்வாகி செல்வராஜ் வேளாண்மை அலுவலர் கிருஷ்ணசாமி மதிமுக நகர செயலாளர் கண்ணன் காங்கிரஸ் நிர்வாகிகள் ராபர்ட், இயேசு ராஜா ப்ரியா மகேஷ், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள் துணை அமைப்பாளர் சிம்சோன்ராஜ், கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் சமூக ஆர்வலர்கள் சோனா மகேஷ் ,கந்தசாமி, மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்தப் பகுதியில் தற்போது அறுவடை நடந்து வருகிறது ஆர்வமுடன் விவசாயிகள் நெற்களை கொண்டு வந்தனர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தாமஸ் அவர்கள் நன்றி கூறினார்.