முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவு தினம் இன்று திமுக நிர்வாகிகளால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து நினைவு தினத்தை அனுசரித்தனர்.
இந்நிகழ்வில் உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன் மற்றும் இளைஞரணி, வழக்கறிஞரணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கலைஞர் வழியில் மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி உரிமையை நிலை நாட்டவும், மீண்டும் 2026 ல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வராக்க உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.