விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல கோதைநச்சியார் புரம் கிராமத்தில் மோட்டார் பழுது காரணமக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை மோட்டார் பலகை சீரமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க விட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவுத்திருந்தனர் அப்போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தாயில் பட்டியில் இருந்து விஜய கரிசல் குளம் செல்லும் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிவகாசியிலிருந்து விஜய கரிசல் குளம் வழியாக வெம்பக்கோட்டை செல்லும் அரசு பஸ் செல்ல முடியாமல் அரை மணி நேரம் போக்குவரத்து பதித்தது.

இது குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மனு அளிக்குமாறு தெரிவித்தார். அதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.