புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இலக்கிய பேரவை சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு இலக்கிய பேரவை தலைவர் ஆ கா முத்து தலைமை வைத்தார் செயலாளர் பாபு ஜான் வரவேற்றார் நிகழ்ச்சியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஓய்வு கருப்பையா வட்டாட்சியர் ஓய்வு ராஜசேகர் தலைமையாசிரியர் ஓய்வு கருப்பையா மணிராஜ் ரோட்டரி சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம் டாக்டர் வி மு முத்தையா வழக்கறிஞர் சேகர் உடற்கல்வி ஆசிரியர் குழந்தைவேல் காவல்துறை ஓய்வு செபஸ்டியான் வேளாண்மை துறை ஓய்வு அக்ரிகிருஷ்ணன் லூர்து நகர் என்டர்பிரைசஸ் நிறுவன நாதன் சமூக ஆர்வலர் செந்தில் ராஜா தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தசாமி மொத்த விற்பனையாளர் ராஜகோபால் கவிஞர் கண் மருத்துவ உதவியாளர் மோகன் நடத்துனர் ஓய்வு மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சியில் இலக்கிய சிந்தனை விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் அண்டனூர் சுறா ஆலங்குடி இலக்கியத்தில் இடம்பெற்றதை குறித்து இலக்கிய சொற்பொழிவு ஆற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழ்ச் செம்மல் கவிஞர் ரமா ராமநாதன் கலைச்சுடர் மணி வடிவேல் கவிஞர் நேசன் மகதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க தலைவர் ஆர்டிஸ்ட் முருகேசன் பட்டதாரி ஆசிரியர் கவிஞர் ராமு மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்








