புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 21-தலித் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்திட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தாத புதுச்சேரி அரசை கண்டித்து சமூக ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக ஜனநாயக கூட்டமைப்பு தலைவர் பாரதிதாசன் தலைமையில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட 21 ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.