ஆகஸ்ட் 6ல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களை வரவேற்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின் படி நகர இளைஞரணி செயலாளர். ராஜேந்திர பிரசாத் தலைமையில் மாவட்ட வர்த்தக அணி துணைத்தலைவர் தளவாய்சுந்தரம் முன்னிலையில் துண்டு பிரசுரம் பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சவுதி அரேபியா பேரவை செயலாளர் எஸ்.எம். மைதின் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் வீரகுமார்,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாரியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.








