• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முழு நீள திரைப்படம் “இன்ஃபிளுன்செர்”

Byஜெ.துரை

Aug 4, 2025

ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற் கொள்கிறார்கள்.

ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள், உண்மையான திகில் மனித இயல்பில் இருளில் தான் இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாகவும், மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் நாயகனாகவும் இலங்கை நடிகர்களான துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இயக்கம் – நீரோ கில்பர்ட், ஒளிப்பதிவு – சிவசாந்தகுமார் எடிட்டிங் – சுஜித் ஜெயக்குமார் இம் மூவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள். இன்றைய UK பிரஜை ஆவர்.

எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசர் – ஞானதாஸ் காசிநாதர் நிர்வாக முகாமையாளர் – செல்லையா சுதர்ஷன் கலை -V.S. சிந்து கலர் கிரேடிங் – பிபின் ஆண்டனி இணை தயாரிப்பாளர்கள் :- ராபின் ஏ டவுன் சென்ட் – UK தயாரிப்பு – எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ் மற்றும் நியூ பிச் நிறுவனங்கள்.

முதன்மை தயாரிப்பு: ஹரிசங்கர் ஜனார்த்தனம் – இந்தியர்,n விதுசன் ஆண்டனி- (Jaffna)முதன்மை தயாரிப்பாளர் ஹரிசங்கர் ஜனார்த்தனம் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜி. பி கிருஷ்ணாவிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனர் மிஷ்கின் புகைப்படக் கலைஞராக 35 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.

இவர் இந்த ஆங்கில படத்தில் முதன்மை தயாரிப்பாளராக தன்னை ஆட்படுத்திக் கொண்டதோடு. புகைப்படக் கலைஞராகவும், கேஃபராகவும், பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இப்படத்தில் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் மலையக மற்றும் ஈழத்தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பங்கேற்றுள்ளது என்பது மகிழ்ச்சிகரமானது.