திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியில் சிவக்குமார், கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர், இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். சிவகுமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

சிவகுமாருக்கும் அவரது பெரியப்பாவான ஜோதிவேல் என்பவருக்கும் கிணற்றிலிருந்து தங்களது வயல்களுக்கு நீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் கடந்த 29 – 05 – 2025 ஆம் தேதி கிணற்றில் இருந்து தனது வயலுக்கு சிவகுமாரின் மனைவி நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் பொழுது சிவகுமாரின் பெரியப்பா ஜோதிவேல் என்பவர் கிருத்திகாவிடம் வாக்குவாதம் செய்த போது கிருத்திகாவை தகராறு செய்து தாக்கியதாகவும் இதனால் துறையூர் அரசு மருத்துவமனையில் கிருத்திகா உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்க பட்டதாக கூறப்படுகிறது, இது குறித்து துறையூர் காவல் நிலையத்திலும் சிவகுமாரின் பெரியப்பா ஜோதிவேல் மீது கிருத்திகா புகார் அளித்திருந்தார்.
புகார் சம்பந்தமாக கிருத்திகாவை போலீசார் அழைக்கவில்லை என தெரிகிறது, மேலும் தன்னை தரக்குறைவாக பேசிய ஜோதிவேல் என்பவர் கணவர் சிவகுமார் மற்றும் அவரது மனைவி கிருத்திகா மீதும் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு வருமாறு துறையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சஞ்சீவி என்பவர் கிருத்திகாவை காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளார்.
அங்கு சென்ற கிருத்திகாவிடம் புகார் சம்பந்தமாக விசாரித்து விட்டு நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் பெற்றுள்ளாய் எனவும், நீ உயர்ந்த ஜாதி தானே தாழ்ந்த ஜாதியைசேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ என்னிடமும் ஆசைக்கிணங்க வேண்டும் கூறியதாக கூறப்படுகிறது.
இல்லை என்றால் உன் விசாரணையை விசாரிக்காமல் நான் காலதாமதமாக அலைக்கழிப்பேன் என காவல் நிலையத்திலேயே கிருத்திகாவிடம் கூறியதால் அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு வந்த கிருத்திகா வெளி மாநிலத்தில் லாரி ஓட்டிக் கொண்டிருந்த தனது கணவரிடம் இது பற்றி செல்போனில் கூறி அழுதுள்ளார், மேலும் லாரியில் இருந்து இறங்கி ஊருக்கு வந்த சிவகுமார் தனது மனைவி கிருத்திகாவை அழைத்துக் கொண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த காவல் கண்காணிப்பாளரான செல்வ நாகரத்தினம் நேரடியாக முறையிட்டு இருவரும் அழுதுள்ளனர். இது குறித்த புகார் மனுவையும் அவரிடம் நேரில் அளித்துள்ளனர்,
புகாரினை பெற்று அங்கிருந்து துறையூர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்ட எஸ்பி செல்வநகரத்தினம் துறையூர் காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு துறையூர் காவல் நிலையத்தில் இருந்து எஸ்எஸ்ஐ சஞ்சீவி என்பவர் மீது ஏற்கனவே பல புகார்கள் வந்த நிலையில் தற்போது பெண் ஒருவர் பாலியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தியதாக எஸ்எஸ்ஐ சஞ்சீவி மீது என்னிடம் புகார் அளித்துள்ளார், இது குறித்து விசாரித்து எஸ் எஸ் ஐ சஞ்சீவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திவிட்டு சிவக்குமார், கிருத்திகா ஆகிய இருவரிடமும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளார்.
மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்து ஒரு மாத காலமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எஸ்.எஸ்.ஐ சஞ்சீவி மீது எடுக்கப்படவில்லை எனவும் இது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்றும் தொடர்ந்து தங்களது அன்றாட பணிகளை கூட செய்ய முடியவில்லை எனவும், புகார்மனுவைப் பற்றி விசாரிக்காமல் தன்னிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தன்னை அழைத்த துறையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரான சஞ்சீவி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தாங்கள்குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் சிவகுமாரின் மனைவி கிருத்திகா கண்ணீர் மல்க கூறியுள்ளார்