புதுகோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியில் அமைந்துள்ள குட்டைகுளம் அப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. இந்நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் விருக்கம் அதிகமானதால் இக்குளத்தை சுற்றி வீடுகள் கட்டப்பட்டன மேலும் இக்குளத்திற்கு வரத்து வாய்க்கால் நடைபெற்று விட்டதாலும் பேரூராட்சி நிர்வாகத்தின் சீரற்ற நிர்வாக திறமையாலும் இக்குளத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த குளம் தற்பொழுது முழுவதும் சாக்கடை நிரப்பப்பட்டு துர்நாற்றம் வீசும் சூழலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பேரூராட்சி முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சாக்கடை நிரம்பி உள்ள குலத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை விட நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர் கரம்பக்குடி ஒன்றிய விசிக செயலாளர் செல்வரத்தினம் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று குலத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்பொழுது பேரூராட்சி நிர்வாகம் குட்டை குளத்தை சீரமைக்க வில்லை என்றால் பொதுமக்களை திரட்டி குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரம்பக்குடி நகரச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்