புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் துவரங்குள்ளைப்பட்டி கிராமத்தில் உள்ள மேல தெருவில் குடிநீர் வினியோகம் செய்து 20 நாட்களாகவும் தொடர்ந்து குடிநீர் கிடைக்கவில்லை எனவும் குடிநீரை பெறுவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று வருவதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குழந்தைகளினுடைய படிப்பு மற்றும் தங்களுடைய வேலைகளும் பறிபோவதாகவும் கிராம பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் உடனடியாக தங்கள் கிராமத்தில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் குடிநீர் வராதது வருத்தம் அளிப்பதாகவும் குடிநீர் வழங்குவதற்கு தனியாக குழாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கிராம மக்கள் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் ஊர் தலைவர் சங்கர் தங்களுடைய கோரிக்கை வலியுறுத்தி பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு விட்டதாகவும் ஆனால் தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.