டிரம்ஸ் சிவமணியின் இசை பறை ஆட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது.
நடிகர் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அகரம் அறக்கட்டளை என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் அரசு பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் 2010 ஆம் ஆண்டு ‘விதை’ என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 5000க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள் இதுவரை படித்து முடித்துள்ளனர்,மேலும் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் விதை திட்டத்தில் 15 ஆம் ஆண்டு விழா சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரியில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளையின் நிறுவனர் சூர்யா, அகரம் அறக்கட்டளையின் அறங்காவலர் கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கிடையே உறையாற்றினர்.
மேலும் அகர அறைக்கட்டளையின் விதை திட்டத்தின் மூலம் படித்து முடித்த மாணவர்களும் தற்போது படித்து வரும் மாணவ,மாணவிகள் இடையே உறையாற்றினர்.

இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் சூர்யா வருகை தந்துள்ளார் அப்போது பேசிய அவர் 15 வருடங்களாக அகரம் அறக்கட்டளையின் மூலம் படித்த மாணவர்கள் அவர்களின் அனுபவத்தை கூற இருக்கிறார்கள்.
மாணவர்களின் அனுபவத்தை அனைவரும் கிராமப்புரம் வரை கொண்டு சேர்த்து படிப்பின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து விழா மேடைக்குச் சென்றார்.