சென்னையை இணைக்கும் முக்கியசாலையாக விளங்கி வருவது பூந்தமல்லி நெடுஞ்சாலை பூந்தமல்லியில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் சென்னை, ஆவடி, அம்பத்தூர் உல்லிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் பூந்தமல்லி பைபாஸ் சென்னீர்குப்பம் சர்வீஸ் சாலையில் உள்ள மழை நீர் கால்வாயில் இருந்து கழிவு செல்ல முடியாததால் பூந்தமல்லியில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் அனைத்தும் நிரம்பி சாலை முழுவதும் தேங்கியுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர் தற்போது தேங்கியுள்ள கழிவு நீரால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அந்த சாலையை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது
மழை நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாகவே தற்போது கழிவு நீர் சர்வீஸ் சாலையை சூழ்ந்துள்ளதாகவும் எனவே பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தற்போது கொளுத்தும் வெயிலிலும் சாலையில் கழிவு நீர் அதிக அளவில் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துடன் சென்று வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.