கடந்த இரண்டு நாட்களாக கேரளாவில் மாநிலம் முழுவதும் வைரலாகும், டெல்லியில் வீதி ஓர கடைகளில் களை கட்டும் கஞ்சா விற்பனை என்ற ஒளிப்பதிவு காட்சிகள் பரவி வரும் நிலையில்.

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை தொட்டு இருக்கும் தமிழகத்தின் எல்லைப்பகுதியான,குமரி மாவட்டத்தின் எல்லை கோடு பகுதியான களியக்காவிளை பகுதியில் மட்டும் அல்லாது, குமரி மாவட்டம் முழுவதும் வைரலாகி உள்ள இந்த வீடியோ.
டெல்லி வீதிகளில் திறந்த வெளியில். தமிழகத்தில் கீரை கட்டுகளை விலை கூறி விற்பது போன்று டெல்லியில் காணும் இந்த காட்சி பற்றி.
டெல்லி வீதிகளில் கஞ்சா விற்பனையை காட்சி பதிவு செய்து வெளியிட்டுள்ள. கேரளாவைச் சேர்ந்த டெல்லியில் பணியாற்றும் அந்த நபர் ஒலியாக பதிவு செய்துள்ள தகவல் (மலையாளம் மொழியில்)
கஞ்சாவை சிகரெட் போல் வடிவமைத்து புகைபிடிப்பது,தண்டனைக்கு உரிய குற்றம். அதே நேரத்தில் கஞ்சா பச்சை இலைகளை நன்கு அறைத்து உருண்டையாக்கி பாலில் கலந்து உட்கொள்ள (பாகு) சட்ட அனுமதி டெல்லியில் இருக்கிறதாம்.

டெல்லியில் அண்மையில் நடந்த விழாவான “சிவன் யாத்திரை”(சிவ காத் கவாடு)
இந்த நிகழ்ச்சியில் கஞ்சா செடிகளை காணிக்கையாக செலுத்துவது டெல்லியில் தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு விழாவாம்.
ஊருக்கு ஊர் சட்டம் வெவ்வேறு வடிவிலானதா.? என்ற அய்யம் இந்த நிகழ்வை பார்க்கும் இந்திய மக்களின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது.
சட்டம் ஒரு இருட்டறை…. வழக்கறிஞர்கள் வாதமே அதன் ஒளிவிளக்கு என்ற பழமொழி உண்மைதானோ.!?