நாகர்கோவில் மண்டலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 தாழ்தள சொகுசுப் பேருந்துகளில் முதற்கட்டமாக 4 பேருந்துகள் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனைக்கு வந்துள்ளது.

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகைப் பேருந்துகள் 12மீட்டர் நீளம் கொண்டது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியினைக் கொண்டது.
மேலும் இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலியை உபயோகிப்பவர்களும் எளிதில் ஏறி இறங்குவதற்கு வசதியாக வடிவமைக்கப்ட்டுள்ளப் பேருந்து. பேருந்தின் பின்புறம் இதன் என்ஜின் அமைந்திருக்கும்.