• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிலையத்தில் வேல்முருகன் திடீர் ஆய்வு..,

ByV. Ramachandran

Jul 30, 2025

மருத்துவமனையின் ஆய்வு செய்ய வந்த ஆட்சி மன்ற குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் திடீரென்று பேருந்து நிலையத்திற்குள் வண்டியை விடுங்கள் என்று சொன்னார். அங்கு திடீரென்று ஆய்வு செய்து பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீரை ஆய்வு செய்து குடித்துப் பார்த்தார்.

இது குடிப்பதற்கு உகந்தது அல்ல இதை சரி செய்யுங்கள் சுத்தமில்லாமல் இருக்கிறது பேருந்து நிலையம் வளாகம் முழுவதும் தூசி நிறைந்து ஒட்டடை நிறைந்து காட்சியளிக்கிறது. இதை உடனடியாக பராமரிப்பு செய்து வர்ணம் பூசுங்கள். சுத்தமாக வையுங்கள் சுத்தம் செய்த பிறகு எனக்கு புகைப்படத்தை எங்கள் ஆட்சி மன்ற குழுவுக்கு அனுப்புங்கள்.. சுத்தமான குடிநீர் இங்கு இல்லை என்பது தெரிகிறது கண்ணாலே நாங்கள் பார்த்து விட்டோம் என்று நகராட்சி நிர்வாக அதிகாரியிடம் கண்டித்தார். பேருந்து பயனாளிகள் தேவையான வசதி செய்து கொடுப்பது ஆட்சியாளர்கள் கடமை அதை நீங்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தார்.

அதிரடியாக ஆய்வு பணியில் இறங்கிய ஆட்சி மன்ற குழு தலைவர் தலைவர் வேல்முருகன் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தை ஆய்வு செய்தார் அங்கு பல்வேறு குறைபாடுகளை கேட்டு அறிந்து அதை சரி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். பேருந்து நிலையத்தில் வரக்கூடிய பொதுமக்கள் பலர் ஆட்சி மன்ற குழு தலைவரிடம் கட்டண கலப்படம் 10 ரூபாய் வசூல் செய்வதாக புகார் அளித்தனர். அருகில் மாவட்ட நிர்வாக உயர் அதிகாரி இருந்தனர் தென்காசி ஆணையாளர் மற்றும் அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் ஆட்சி மன்ற குழு தலைவர் அவர்கள் முறையாக கட்டணம் எவ்வளவு என்று கேட்டறிந்தார்.

நகராட்சி நிர்வாகம் சார்பாக 3 ரூபாய் வசூல் செய்ய வேண்டும் என உத்தரவு இருக்கிறது என்று சொன்னார். அதை மீறி இங்கு பத்து ரூபாய் வசூல் செய்வதாக புகார் அளித்தனர். அது தவறு திருத்திக் கொள்ளுங்கள் பாவப்பட்ட மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கான அரசு இது. அதிக கட்டணம் செய்வது தவறு என ஆட்சி மன்ற குழு தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார். ஆணையாளர் தென்காசி நிர்வாக நகராட்சி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பதாகை வையுங்கள் முறையாக கட்டண வசூல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.