சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க.மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதன் மாநில பொறுப்பாளர் நான். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன்.
பிரதமர் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தது உற்சாகத்தை தந்து உள்ளது. தமிழகத்தில் சோழ மன்னனை பெருமைப்படுத்திடவும் தென் மாவட்ட மக்களுக்காக விமான நிலையத்தை விரிவுப்படுத்தி வந்ததை மறைப்பதை போல் அறிக்கை தருகிறார்.
உலகத்திற்கு கங்கை- காவிரி இணைப்பை தமிழன் செய்து உள்ள பெருமையை பேச பிரதமர் வருகிறார். ஆன்மீக தமிழனை தமிழனாக ஏற்றுக் கொள்வதில்லை. மிக மோசமான சூழ் நிலை உள்ளது. ராஜேந்திர சோழனும் தமிழன் தான். அவரது சாதனைகள் எல்லாம் தமிழனின் சாதனை தான். மோடி பேசும் கீழடி பற்றி பேசுவது. கீழடியை யாரும் மறைக்கவில்லை. கீழடி அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்கப்படும். பிரதமர் வருவதை பெருமையாக கருதாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. இது இளைஞர்களுக்கு புரிந்து இருக்கும். தமிழனை பாராட்ட போற்ற தான் பிரதமர் மோடி வந்தார்.
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏன் பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதிமுக- பா.ஜ.க.வும் பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது. தலைவர்கள் ஒரு கருத்து இருக்கலாம் மோடி, அமீத்ஷா பல மாநிலங்களில் வெற்றி கண்டவர்கள். பல மாநிலங்களில் வெற்றி பார்முலாக்களை ஏற்படுத்தியவர்கள். ஊழல் செய்தவர்கள் நேர்மறையாக அரசியல் செய்பவர்கள். இதனால் குறைத்து மதிப்பீட முடியாது. பலர் பல கருத்துகளை சொல்லாம். மறைமுகமாக திமுகவுடன் கூட்டணி என்று சொல்லி கொள்ளலாம். பா.ஜ.க.- அதிமுக பலமான கூட்டணியாக இருக்கிறது. தமிழகத்தில் மக்கள் பரிதவித்து கொண்டு இருக்கிறார்கள். மாற்றம் ஏற்பட வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி இணைந்தாலும் மிகப்பெரிய கூட்டணி தான். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமல் பிறந்த குழந்தைகளை தரையில் படுக்கவைக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் உள்ள வசதி போல் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்துங்கள் என்று சொல்கிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறுகின்றனர். சாலையில் செல்ல முடியாது என்பதால் ரெயிலில் செல்கிறார்கள். அனைவருக்கும் ஒரேமாதிரியான வசதிகள் கிடைக்க வேண்டும்.

யாரும் துன்பபடுத்துவதையும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை ஒப்பு கொள்ள முடியாது. பூதக் கண்ணாடி வைத்து மற்ற மாநிலங்களை பார்ப்பதை விட தமிழ்நாட்டில் நடப்பதை பார்க்க வேண்டும்.
14 ஆயிரம் செவிலியர்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று திராவிட மாடல் குறித்தும் துணை முதல்வர் கருத்து குறித்தும் கேளுங்கள் சொல்வார்கள்.
காங்கிரஸ் நிலைமை போல் பா.ஜ.க. இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அங்கீகாரம் தந்து உள்ளனர். காங்கிரஸ் தான் பரிதவித்து போய் உள்ளது. அமீத்ஷா, மோடி சரியாக அங்கீகாரம் தருகின்றன்ர். செல்வ பெருந்தகை என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறார்.
தேர்தலுக்காக தான் மகளிர் தொகையை வழங்க உள்ளனர். 2 வருடம் கழித்து தான் வழங்கினார். 2 வருட பணத்தை சேர்த்து தந்து இருக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் மக்களுடன் ஸ்டாலின் என எல்லாமே தேர்தலுக்காக தான். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
பல மருத்துவமனைகள் திறந்து பாதியாக தான் இயங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.