மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மங்களாம்பட்டி கிராமம். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் மரத்தின் அடியில் உள்ள மதுரை வீரன் சுவாமிக்கு ஆடிப்படையல் வைப்பது வழக்கம். இதற்காக அப்பகுதி பொதுமக்கள் வெகு விமர்சையாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.

பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றும் விதமாக இந்த வருடம் தோறும் ஆடி மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட சேவல்களை காணிக்கையாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வழங்குவர். அதனை கோவில் பூசாரிகள் பலியிட்டு சேவல் கறியுடன் மொச்சை பயிர் கலந்து சமைத்து மதுரை வீரன் சுவாமிக்கு படையல் இடுவர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இது முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே சமைப்பது அதனை உண்பது என ஆண்கள் மட்டுமே இதனை மேற்கொள்வர். பெண்களுக்கு சுவாமி கும்பிட மட்டும் அனுமதி அளிக்கப்படும். ஆனால் அவர்களுக்கு விழாவில் எந்தவித பங்களிப்பும் மற்றும் உணவும் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக “பொறி” வழங்கப்படுகிறது.
இதுபோன்று விழா நடத்துவதால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சாதி, சமய பேதமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆண்கள் அனைவரும் பங்கேற்று சேவல் கறி பிரசாதத்தை உணவருந்தி சென்றனர்.