• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கோவையிலும் ஒரு அபிராமியா ?

BySeenu

Jul 26, 2025

கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது நான்கரை வயது குழந்தையுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனியே வாழ்ந்து வரும் தமிழரசி கட்டிட வேலைக்கு சித்தாலாக சென்று வரும் நிலையில் அவருடன் கட்டிட வேலை செய்து வரும் வசந்த் என்பவர் உடன் சில மாதங்களாக பழகி வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் அவரது நான்கரை வயது அபர்ணா ஸ்ரீ என்ற பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த தமிழரசியை பிடித்து வந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது குழந்தை அழுது கொண்டு இருந்ததாகவும், அப்போது அவர் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தமிழரசி தெரிவித்து உள்ளார்.

இதை அடுத்து காவல் துறையினர் தமிழரசி இடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவர் வசித்து வரும் இருகூர் பகுதிக்கு நேரில் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்தக் கொடூரமான சம்பவத்தில் குழந்தையின் தாயான தமிழரசியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில்,

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து தனியாக மகளுடன் வாழ்ந்து வந்ததாகவும், கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்த தமிழரசி, அதே இடத்தில் பணி புரிந்த வசந்த் என்பவருடன் கடந்த சில மாதங்களாக தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவுக்கு இடையூறாக இருந்த அந்த நான்கரை வயதில் பெண் குழந்தை அபர்ணா ஸ்ரீ யை கொலை செய்து உள்ளது தற்பொழுது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் குழந்தையின் உடற்கூறு பரிசோதனையில், குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக உறுதியாகி செய்யப்பட்டு உள்ளது.

குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால், அதை தாங்க முடியாமல் அடித்ததாக தமிழரசி ஆரம்பத்தில் வாக்குமூலம் அளித்து இருந்தார். ஆனால், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

தற்போது, தமிழரசியுடன் தொடர்பில் இருந்த வசந்த் என்பவரையும் போலீசார் கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து அவரிடம் காவல் துறையினர் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியாணி மாஸ்டருக்கு ஆசைப்பட்டு குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அபிராமிக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்பட்டது,

இந்நிலையில் நேற்று அதேபோன்று கோவையில் கள்ளக் காதலுக்காக பெற்ற நான்கரை வயது பெண் குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.