கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 22). இவர் கரூரில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இருசக்கர வாகனத்தை சரி பார்ப்பதற்காக பைக் ஷோரூமில் இருந்து வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது திருமாநிலையூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முன்புள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது, சென்டர் மீடியனில் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த லோகேஸ்வரன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.