• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கோவை கோ கிளாம் விற்பனை கண்காட்சி..,

BySeenu

Jul 25, 2025

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் தனது சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது.

ஜூலை 25 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள்,வீட்டு அலங்கார பொருட்கள், அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஆடி மாத சிறப்பு விற்பனை கண்காட்சியாக கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது.

ஜூலை 25,26,27 ந் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அனைத்து சீசன்களுக்கான பல்வேறு விதமான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,திவ்யா விக்ரம்,சந்தோஷி ராஜேஷ்,மாலினி ஜெயமுருகன்,நிர்மலா குருபிரசாத்,மேரி பீனா,லலிதா ரஞ்சித் மீனா,விஜி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில்,

இந்த ஆண்டு பல்வேறு சீசன்களில் சிறப்பு விற்பனை கண்காட்சி நடைபெற்ற நிலையில், இந்த கண்காட்சியில் ஆடி மாத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்..

ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள், கொல்கத்தா, லூதியானா, குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் கண்காட்சியில் ஆடை, ஆபரணங்கள், , குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள்,பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

மேலும் கோடை காலத்திற்கு ஏற்ற வகையில் பெண்கள் பயன்படுத்தும் இயற்கை முறையிலான அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிற்கு தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஜூலை 27 ந்தேதி வரை நடைபெற உள்ள இதில் கோவை,திருப்பூர், ஈரோடு, நாமக்கல், உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.