விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் முடங்கியார் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வாறுகாலியில் தேங்கி உள்ள கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில் குப்பைகள் போன்றவற்றை அல்லாமல் விட்டதால் மழை பெய்யும் நேரங்களில் கழிவுநீர்கள் சாலையில் ஓடுவதால் தற்போது நகராட்சி நிர்வாகம் பெரிய வருகால்களை (கழிவுநீர் ஓடை) சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடைகளில் உள்ள நடைமேடைக் கல்களை அகற்றி ஜேசிபி வாகனங்களை வைத்து சுத்தம் செய்ய வருகிறது அள்ளப்படும் கழிவுகள் சாலைகளில் கொட்டப்படுவதால் வாருகாலில் இருந்து செல்லக்கூடிய கழிவுநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. குப்பைகளும் போடப்பட்டு உள்ளதால் துர்நாற்றத்தால் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் அவதிப்பட்டு செல்கின்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் மலை போல் குப்பைகளை குவித்து வைத்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது இந்த வேலைகளை செய்தால் இது போன்ற குப்பைகள் தேங்காது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்யலாம். பல வருடங்களாக விட்டு விட்டு தற்போது செய்வதால் மிகுந்த துர்நாற்றமும் தொற்றுநோய் ஏற்படும் அவநிலை உள்ளதாக சமூக ஆர்வலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
