• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அடிப்படை வசதி கூட இல்லாத அலுவலகம்..,

ByKalamegam Viswanathan

Jul 23, 2025

மதுரை மாவட்ட தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கடந்த ஆண்டு வரை மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் செயல்பட்டு வந்தது. நிர்வாக வசதி காரணங்களுக்காக மதுரை கீழக்குயில்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாநகர் பகுதியில் இருந்து புறநகர் பகுதிக்கு இடமாற்றப்பட்டதால் பொதுமக்களுக்கு அலைச்சல் அதிகம் என ஏற்கனவே குற்றச்சாடு எழுந்தது.

இந்த நிலையில் தற்போது புதிதாக இழப்பில் குடி பகுதி அருகே திறக்கப்பட்டுள்ள போக்குவரத்து அலுவலகத்தில் வரக்கூடிய பொது மக்களுக்கு உட்கார நாற்காலி குடிக்க குடிநீர் கூட இல்லாமல் அதிகாரிகள் கார் நிறுத்தும் இடத்தில் தரையில் அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் கட்டிடம் நீடான பகுதியில் இருப்பதால் பொதுமக்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு மேலே ஏறி வர வேண்டிய நிலை உள்ளது.

அத்துடன் குடிநீர் மற்றும் நாற்காலி செடிகள் இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் தரையில் அமர்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அருகில் இருக்கக்கூடிய எல்எல்ஆர் அறையில் காத்திருக்கலாம் என்று விளக்கம் அளித்தனர் ஆனால் வெள்ளலார் பகுதியில் புதிதாக லைசன்ஸ் எடுக்க விண்ணப்பித்தவர்கள் மட்டுமே அமர வசதிகள் உள்ளதாகவும் பொதுமக்கள் வெயிலிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதால் மற்ற அரசு அலுவலகங்களில் இருப்பதைப் போல அலுவலகத்திற்கு பொதுமக்கள் அமர்வதற்கு நாற்காலி மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.