• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

12 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு வழங்கிய முதல்வர்..,

ByS. SRIDHAR

Jul 22, 2025

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜாளிபட்டி நம்பம்பட்டி ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் முகாமிட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

அப்போது தொழிலாளர் வாரிய அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்பட 12 பயனாளிகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் வகையில் நகல்களை வழங்கினர். எனவே முகாமில் நகல்களைப் பெற்ற பயனாளிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெய்வநாயகி விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் RR. ரவிச்சந்திரன் எம்.வள்ளியம்மை ஆகியோர் ஏற்பாட்டில் இம் முகாம் நடைபெற்றது.

அப்போது தொழிலாளர் நல வாரியத்தில் 10 மணியளவில் ராஜாளிபட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் வாரிய அட்டை வேண்டும் என்று மனு கொடுத்ததின் பேரில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக நலவாரிய அட்டை வழங்கப்பட்டனர் இதனால் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்செல்வி.

அப்போது இம்முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலை 9 மணி முதல் தங்களது கோரிக்கை மக்களை வழங்க வருகை தந்தனர். அப்போது பொதுமக்களை சந்தித்த திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன் திமுக மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்குமரன் ராஜாளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செ.சின்னசாமி உள்பட திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து பரிந்துரை செய்தனர்.

அப்போது உடனடி தீர்வாக 12 பயனாளிகளுக்கு தீர்வு காணப்பட்டு நகல்களை வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.