• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..,

ByPrabhu Sekar

Jul 21, 2025

சிபிஐ விசாரணையில் அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினரே வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி இருப்பது தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை உண்மை என்றால் அரசே தவறு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

சிஸ்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே, தவறு செய்கிறார்கள் என்றால் என்ன செய்ய முடியும். தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது.

பந்தோபஸ்து, லா அன் ஆர்டர், நைட் டியூட்டி என பல பணிகளில் காவல்துறையினருக்கு மிக மிக அதிகமாக பணிச்சுமை உள்ளது.
காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க தமிழ்நாடு முதல்வர் என்ன செய்திருக்கிறார்.

தெலுங்கானாவை ஒப்பிடும்போது தமிழ்நாட்டு காவல்துறையினரின் சம்பளம் மிக மிகக் குறைவு. வெளியே உள்ள பணம் படைத்தவர்கள் காவல்துறையை தூண்டுகிறார்கள்.

இந்த சம்பவத்தில் காவல் துறை காவல் துறை என நேரடியாக கூறுவதை விட காவல்துறை மீது உள்ள அழுத்தத்தையே கூற வேண்டும்.

காவல்துறை மீது உள்ள பணிச்சுமையையும் மன அழுத்தத்தையும் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்யாவிட்டால் அடுத்த ஒரு அஜித்குமாரும் உயிரிழக்க நேரிடும்.

பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை,;அதே நேரத்தில் ஏமாறுகிற கட்சியும் இல்லை* எடப்பாடியின் கருத்துக்கு அண்ணாமலை என பதில் அளித்தார்
மீண்டும் சொல்கிறேன் கூட்டணி அமைத்ததில் எனது பங்கு இல்லை மற்றொரு கட்சிகளும் இன்னொரு கட்சியை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

எல்லா கட்சிகளும் மற்ற கட்சிகளை சகோதரத்துவமாக பார்க்க வேண்டும்.

அதிமுகவுடன் ஒரு பெரிய கட்சி இணைய உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூரியது குறித்து கேட்ட பொழுது,

எடப்பாடியின் பேட்டியை நான் பார்க்கவில்லை, பெரிய கட்சி சேருமா என எனக்கு தெரியவில்லை. கோவையில் தொடங்கிய எடப்பாடி என் சுற்றுப்பயணத்தில் பாஜக மாநில தலைவரும் மத்திய இணை அமைச்சரும் கலந்து கொண்ட போது நான் எதற்காக கலந்து கொள்ள வேண்டும்.

கட்சியின் சார்பாக அகில இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில் நான் எதற்கு கலந்து கொள்ள வேண்டும்.

தேசிய பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, பதவியை நோக்கி நான் சென்றதில்லை, மாநில தலைவர் பதவியே வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது. நான் எந்த பதவியையும் விரும்பவில்லை.

  • காவல்துறையில் கைது செய்யப்படும் குற்றவாளிகளிடமிருந்து பொருட்களை கைப்பற்ற முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை அடைகின்றனர் என்பது குறித்து கேட்டபோது* தமிழகத்தில் ஒரு RTI எடுத்து பார்த்தால் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்கள் 20% கூட இருக்காது அதற்கு மிளகாய் பொடி லத்தி எல்லாம் பயன்படுத்த வேண்டி இருக்கிறது ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் பல வருட சேமிப்பு கங்கம் தான் அந்த தங்கத்தை ஒரு நாள் இரவு பறி கொடுத்துவிட்டு குடும்பங்கள் வேதனை அடைகின்றன அதற்கு தமிழக அரசு ஒரு திட்டத்தை தீட்ட வேண்டும் காப்பீடு செய்து ஒரு வருடத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து பொருள்களை கைப்பற்ற முடியவில்லை என்றால் அந்த இழப்பீடை அரசு வழங்க வேண்டும் எனக் கூறி புறப்பட்டுச் சென்றார்..