புதுக்கோட்டை மாநகர பகுதியான மேளராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ நையினாராஜு தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு வேல் பூஜை நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற வேண்டுமென ஒவ்வொருவரும் ஓம் சரவணபவ என ஒரு லட்சம் தடவை பாராயணம் செய்து தங்கள் முன் தட்டில் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு விபூதி பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ நையினாராஜு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டன.

பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.