• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆதினத்திடம் சைபர் கிரைம் நேரில் விசாரணை..,

ByKalamegam Viswanathan

Jul 20, 2025

கடந்த 2021ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக மதுரை ஆதீனம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டு பல்வேறு சைவ சமய பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டை பகுதியில் சாலையில் மற்றொரு கார் தன் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாக கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

அதில் குறிப்பாக “குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்” கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி., காட்சியை காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிட்டனர்.

வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மதமோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய கோரி சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அளித்து புகாரின் கீழ் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமின் கோரி மதுரை ஆதினம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார்.

அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை, காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துற்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்கு சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் காவல்துறையினர் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு நேரில் வருகை தந்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான காவல்துறையினர் மதுரை ஆதினத்திடம் ஒரு மணி நேரம் தனியாக விசாரணையை நடத்தினர்.

மதுரை ஆதினம் ஹெர்னியா ( குடல் இறக்க) அறுவை சிகிச்சை முடிவடைந்து மருத்துவ ஓய்வு எடுத்துவரும் நிலையில் படுக்கையில் படுத்திருக்கும் நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணை தொடங்கியபோது மதுரை ஆதினம் தன்னால் எழுந்திருக்க முடியாது வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து கொடுக்க உதவியாகவும், தனது தரப்பு வாதத்தை சொல்வதற்கும் தனக்கு தன் மட உதவியாளரை உதவிக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என மதுரை ஆதினத்தின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்தனர். தனக்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மெயில் மூலமாக வழக்கு விசாரணை தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதாக மதுரை ஆதினம் காவல்துறையினரிடம் கூறிய நிலையில் படுத்தபடி விசாரணை நடைபெற்றது.

மதுரை ஆதினத்தின் வழக்கறிஞரான ராமசாமி மெய்யப்பன், பாஜக வழக்கறிஞர்கள், மதுரை மாநகர பாஜக மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆகியோர் வருகைதந்தனர்.

மதுரை ஆதின மடத்திற்குள் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் முதன்முறையாக மதுரை ஆதினத்திடம் விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது.

சைபர் கிரைம் விசாரணை நடைபெற்றபோது விளக்குத்தூண் காவல் சரக உதவி ஆணையர் சூரக்குமரன் தலைமையில் மதுரை ஆதின மடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை ஆதின மடத்தில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்த வருகை தர உள்ள நிலையில் ஆதீனம் மடத்திற்குள் ஆதீன தவிர மற்றவர்கள் யாரும் இருக்கக் கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

ஒரு மணி நேர விசாரணையின் போது விபத்து நடைபெற்ற மே 2ஆம் தேதி நடந்த விபத்து. சம்பவங்கள் குறித்தும் மதுரை அதிகம் மற்றும் அவருடைய ஓட்டுனர் செய்தியாளர்களை சந்தித்து பேசியது தொடர்பான பல்வேறு கேள்விகளை சைபர் கிரைம் காவல்துறையினர் எழுப்பினர்

காவல்துறை மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்தியது மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது. இந்தத் திமுக அரசு எனவும், இந்த ஆட்சியில் எந்தவொரு தனி மனிதனைப் போலவே, மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகிறது. தற்போது விசாரணை என்ற பெயரில் தமிழ்நாடு காவல்துறையை வைத்து மதுரை ஆதீனத்தையும் தொந்தரவு செய்து வருகிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை ஆதினம் தரப்பு வழக்கறிஞரான ராமசாமி மெய்யப்பன் :

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் தனியாக விசாரணை நடத்தினர் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை மதுரை ஆதீனக் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவ ஆய்வில் இருந்த நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது உதவிக்காக ஒருவரை பணியாளர் நியமிக்க வேண்டும் என கூறிய நிலையில் அதனை காவல்துறையினர் ஏற்க மறுத்தனர். இந்நிலையில் மதுரை ஆதீனம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தார் என தெரிவித்தார்.

மாநகர மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி பேசிய போது மதுரை ஆதீனம் மருத்துவ ஓய்வில் படுக்கையில் இருந்த போதும் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள் பணியாளர் ஒருவர் உதவிக்காக வேண்டுமென கேட்ட நிலையிலும், அதனை காவல்துறையினர் மறுத்தனர். இது போன்று படுக்கையில் இருக்கும்போதே ஆதினத்தை விசாரணை செய்வதை ஒருவித இடையூறு போல தான் எனவும் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக்கு மதுரை ஆதீனம் முழுமையான ஒத்துழைப்பு அளித்தார் என தெரிவித்தார்.