புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் Ln. K. செல்லையா தலைமை தாங்கி கூட்டத்தை துவக்கி வைத்தார்.

செயலாளர் Ln. A. பாண்டிவேல், முன்னிலை வகித்து சங்கத்தின் திட்டங்கள் செயல்படுத்துவத்துக்குறித்து உறுப்பினர்களிடம் எடுத்து உரைத்தார். தலைவர் செல்லையா அவர்கள் பேசும்போது சங்கத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கப்பட்டுள்ளது என்றும் 15 km க்குள் அதனை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மாதந்தோறும் நிறைய நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
சங்கத்தின் சாசன தலைவர் Ln. A. அரவிந்த் அவர்கள் பேசும்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் குக்கிராமத்தில் நடத்த இருப்பதாக தெரிவித்தார்கள். இதனை Ln. N. S. வெங்கடேசன் அவர்கள் அவருடைய சார்பில் நடத்தி தருவதாக அறிவித்தார்கள். உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவித்தார்கள். நிறைவாக பொருளாளர் Ln. செல்வகுமார் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.