• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை..,

ByRadhakrishnan Thangaraj

Jul 19, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஐயப்பனுக்கு ஆடி மாத சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் அமைந்துள்ள சித்திவிநாயகர் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு, ஓம் ஸ்ரீவில்லாளி வீரன் ஐயப்பபக்த பஜனை சேவா சங்கத்தின் சார்பில் இந்த பூஜை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபி ஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து திவ்யநாம
சங்கீர்த்தன பஜனை நடைபெற்றது. பின்பு உற்சவர் அலங்கரிக்கப் பட்டு விசேஷ தீபாராதனை நடை பெற்றது.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட் டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.