• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வுடன் வாழ்வேன்- யாஷிகா ஆனந்த்

Byadmin

Aug 5, 2021

நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளது தெரிந்ததே. இப்போதும் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான பவானி என்பவர் மரணமடைந்தார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அந்தப் பதவில்,
“என் தற்போதைய நிலையை நான் விவரிக்கவே முடியாது. எனக்கு இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவுகள் மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓய்வெடுத்து வருகிறேன். எழுந்து நிற்கவோ… நடக்கவோ இன்னும் குறைந்தது 5 மாதங்கள் ஆகும்.

தற்போது நாள் முழுவதும் படுத்த படுக்கையாகவே இருக்கிறேன். இயற்கை உபாதைகளைக் கூட படுக்கையிலேயேதான் கழிக்கிறேன். என்னால், இடது அல்லது வலது பக்கம் திரும்ப முடியாது. பல நாட்கள் இப்படியேதான் இருக்க வேண்டும். என்னுடைய பின் பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக என் முகத்தில் எதுவும் காயம் ஏற்படவில்லை. இது நிச்சயமாக எனக்கு மறு பிறப்பு என்றே உணர்கிறேன். கடவுள் என்னை தண்டித்துள்ளார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடும்போது இது ஒன்றுமில்லை. நான் இனி வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன்தான் வாழ்வேன்.


பயங்கர விபத்தில் இருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா…? இல்லை என் உயிர் தோழியை எடுத்துக் கொண்டதற்காக பழி சொல்வதா..? என்று எனக்குத் தெரியவில்லை. நான் பவானியை மிஸ் பண்ணுகிறேன். நீ என்னை மன்னித்துவிடுவாய் என தெரியும். ரொம்ப சாரி. உன் குடும்பத்தாரை இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் விட்டுவிட்டேன். ஒவ்வொரு நொடியும் உன்னை மிஸ் பண்ணுகிறேன். உயிருடன் இருப்பதற்காக எனக்குள் குற்ற உணர்ச்சியாக உள்ளது. உன் ஆத்மா சாந்தியடையும் என்று நம்புகிறேன்.

நீ மீண்டும் என்னிடம் வர பிரார்த்தனை செய்கிறேன். ஒரு நாள் உன் குடும்பத்தார் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். நாம் ஒன்றாக இருந்த நினைவுகளை என்றும் கொண்டாடுவேன். நான் இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாடப் போவது இல்லை. அதனால் ரசிகர்கள் யாரும் என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். எல்லா எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்து, அனைவரது பிரார்த்தனைகளுக்கும், நலன் விரும்பிகளுக்கும், அனைவரது அக்கறை மற்றும் அன்புக்கும் நன்றி…” என்று உணர்வுப10ர்வமாக தெரிவித்துள்ளார் யாஷிகா.