அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டுமென கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களிடம் அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அவர்களின் முயற்சியில் கோவையை சேர்ந்த ரவுண்டு டேபிள் இந்தியா என்ற அமைப்புடன் பேசி ரூ25 – லட்சம் நிதியுதவி பெற்று 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது,

அதன் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று (18-07-2025) திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து மாணவர் மத்தியில் உறையாற்றியவர். பெரும் தலைவரின் தொலை நோக்கு பார்வையில் 50_ஆண்டுகளுக்கு முன்பே பெரும் தலைவரின் தொலைநோக்கு பார்வை , தலைவருக்கு கல்வி வளர்ச்சி பற்றிய பெரும் நோக்கத்தின் எடுத்து காட்டு. மாணவிகளிடம் விஜய் வசந்த் கல்வியோடு விளையாட்டு,நடனம் பாட்டு போன்ற பிற கலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். விழா நிறைவில் பள்ளியில் தேசிய மாணவர் படை (NCC) ) தூப்பாக்கி சூடும் போட்டியில் தங்க மெடல் பெற்ற மாணவர்கள் தங்க மெடல் சான்றிதழ் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மூலம் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட கல்வி அலுவலர் கே. பாலதண்டாயுதபாணி, ரவுண்டு டேபிள் இந்தியா அமைப்பின் தலைவர் நவீன், பேச்சிப்பாறை நகர தலைவர் குமார், குலசேகரம் நகர தலைவர் வில்சன் மற்றும் திபாகர், விஜின், பள்ளி தலைமை ஆசிரியை சஜிதா, கன்வினர்கள் பிரவீன் எட்வர்ட், டாக்டர் வம்சி, முன்னாள் தலைவர் ராஜா, செயலாளர் கரன் ஷங்ல உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
