கர்ம வீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் திருமுருகன் மற்றும் காரைக்கால் மாவட்ட சார்பாக மாலை அணிவித்து மரியாதை பல்வேறு கட்சி நிர்வாகிகளும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123வது பிறந்த தினம் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அம்பாள் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவசிலைக்கு புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு அதிகாரிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர், என்.ஆர் காங்கிரஸ், பாஜக தமிழக வெற்றி கழகத்தினர் தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
