திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் V.V.ராஜன் செல்லப்பா பேட்டி அளித்தார்.
சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளித்திருக்கலாம். ஆனால் அறநிலைத்துறை திருப்பரங்குன்றம் மட்டும் விடுமுறை அளித்து இருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி புனித நன்னீராட்டு விழா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நலத்திட்டங்களையும் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

இந்த அன்னதானத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சைவ உணவு வழங்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் பகுதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பாக அன்னதான வழங்கப்பட்டது.
.அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழக்கு 14 ஆண்டுகள் கழித்து இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அதிகமாக கலந்து கொண்டனர். குறிப்பாக இதனை திருமண ஊர் என்பார்கள். அதன் அடிப்படையில் விழா ஊர் என்பார்கள். இதன் அடிப்படையில் சிறப்பு மிக்க முருகன் திருக்கோவில் குடமுழுக்கை கண்டு மக்களை பரவசப்படுத்தி இருக்கிறது.

உரிய பாதுகாப்பும் உரிய அடிப்படை தேவைகள் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழா ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை கொடுத்து இருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் அறநிலை துறை சார்பில், திருப்பரங்குன்றம் பகுதி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி மக்கள் அனைவரும் வந்து முருகனை தரிசனம் செய்துள்ளனர். முருகனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். வெளிப்படைத்தன்மையாக செய்திருக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
