தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட கொடைக்கானல் சாலைக்கு கீழ் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கெங்குவார்பட்டி, காமக்காபட்டி உள்ளிட்ட பகுதியில் தோட்டங்களில் மாடு மற்றும் ஆடுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கெங்குவார்பட்டி மற்றும் காமக்கா பட்டி கொடைக்கானல் சாலைக்கு கீழ் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த 5க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 3 பசு கன்றுகளை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது.
இந்த நிலையில் கொடைக்கானல் செல்லும் சாலைக்கு கீழ் உள்ள முருகன் என்பவரது, தென்னந்தோப்பில் அமராவதி என்பவர் கால்நடை வளர்த்து வந்துள்ளார்.
இன்று கன்றுக்குட்டியை மெய்ச்சலுக்காக தென்னந்தோப்பு பகுதியில் கட்டிவைக்கப்பட்டு இருந்த நிலையில் பட்டப் பகலில் சிறுத்தை கன்று குட்டியை தாக்கி உடல் பாகங்களை தின்றுவிட்டு சென்றுள்ளது.
மேலும் அப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளான 5 ஆடுகள் மற்றும் 3 கன்று குட்டிகளை சிறுத்தை தாக்கிக் கொண்டுள்ளது.
எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.