காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் பணிக்காக மத்திய அரசு 130 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

இந்த நிலையில் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் பணி செய்தால் தங்கள் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கம் செய்யும் இடத்தை மாற்ற கோரி கருக்களாச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருக்களாச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் இன்று காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் விரிவாக்க செய்யும் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் செயலாளர் ஆய்வு செய்ய உள்ள நிலையில் கருக்களாச்சேரி மீனா மக்கள் அப்பகுதியில் போராட்டம் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.