திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகத்தை ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் நின்று பார்ப்பதற்கு 1700 பேருக்கு அனுமதி அளிப்பதாகவும் அதாவது விஐபிகள் அரசியல் கட்சியினர் அலுவலர்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி அட்டை வழங்கும் பணியும் கோவில் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

பத்திரிகையாளர்கள் அனுமதி அட்டை குறித்து கோவில் துணை ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முறையாக பதிலளிக்காமல் நழுவி நழுவி செல்கின்றனர். மேலும் ராஜகோபுரம் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை படம் பிடிக்க ஊடகத்தினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகம் கொடுக்கும் வீடியோ லிங்கை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறும்
பத்திரிக்கையாளர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்க இயலாது என கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.