• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மனித நேயம் காத்திடுவோம் விழிப்புணர்வு பேரணி..,

ByP.Thangapandi

Jul 12, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித கடத்தல் மற்றும் மனித நேயம் காத்திடுவோம் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை புனித வளனார் சமூக பணி மையத்தின் திட்ட இயக்குநர் லூசியா முன்னிலையில் ஊராட்சி செயலாளர்கள்ஜெயராமன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த பேரணியானது நக்கலப்பட்டி கிராம மந்தை முன்பு தொடங்கி கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்களின் வழியாக சென்று பொதுமக்களிடம் மனித கடத்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, சிறுமி திருமணத்தை தடுப்பது மற்றும் மனித நேயத்தை பாதுகாப்பது குறித்து கையில் பதாகைகளை ஏந்தி சென்று பெண்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக மனிதநேயம் காப்பது குறித்தும், மனித கடத்தல் குறித்தும் கருத்தரங்கு கூட்டம் மற்றும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பது, மனித நேயம் காப்பது குறித்து உறுதிமொழி எடுத்துகொள்ளப்பட்டது. மனிதர்கள் கடத்தபடுவது, பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தப்படுவது, பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது, குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து மகளிர் சுயஉதவி குழு பெண்கள் நாடகம் மூலம் நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கிளை செயலாளர் பால்பாண்டி, தவமணி, உள்ளிட்ட கிராம மக்கள், மகளிர் சுயஉதவி பெண்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.