விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரெட்டியபட்டியை சேர்ந்த கண்ணாயிரம் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் சூரங்குடி நாகமாரி நகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 36) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

கரிசல்பட்டி கிராமத்தில் உள்ள கிரசரில் கிராவல் மண் லாரியில் ஏற்றிக் கொண்டு லாரியில் ஏழாயிரம் பண்ணை வழியாக தனியார் பல்க் பின்புறம் லாரியில் இருந்து மணலை கொட்ட முயன்றபோது அருகில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக டிப்பர் லாரி கவிழ்ந்தது. இதில் செல்லப்பாண்டி மற்றும் கிளீனர் கோவில் செல்லையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த அருண்குமார் (வயது 27 ) ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் கவிழ்ந்த லாரியில் இருந்து காயம்பட்ட இருவரையும் மீட்டபோது செல்லப்பாண்டி மயங்கிய நிலையில் இருந்ததாக தெரிய வருகிறது. உடனடியாக சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சோதனை செய்ததில் செல்லப்பாண்டி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
காயமடைந்த அருண்குமாரை சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து ரொம்ப கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






; ?>)
; ?>)
; ?>)
