கரூர் சேலம் பைபாஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சவுத் ஜோன் ஒன்று ஜூடோ போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 11, 14, 17, 19 ஆகிய வயது எடை பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த போட்டி நாக்கோட் முறையில் நடைபெறுகிறது வரும் 13ஆம் தேதி இறுதிப்போட்டி மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் ராஜஸ்தானில் நடைபெறும் தேசிய அளவிலான ஜூடோ போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.