மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பணிமனையில் தொழில்நுட்ப பணியாளர்கள் பழுது நீக்கிட உதிரி பாகங்கள் இல்லாததால் தினமும் பேருந்தை பழுதடைந்த நிலையிலேயே இயக்குவதால் பிரேக் டவுன் விபத்து உயிரிழப்பு ஏற்படுகிறது,இதனை சரி செய்யவும் தொழிலாளர்களுக்கு முறையான ஓய்வு கொடுக்காமல் தொடர்ச்சியாக வேலை செய்ய சொல்வதால் பணியழுத்தம் காரணமாக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை பணிமனை நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் பிரச்சனைகளை சரி செய்ய கோரியும் பணிமனை நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் சிஐடியு தலைவர் செல்லத்துரை செயலாளர் அருள் ஆனந்த ஜீவா சம்மேளன உதவி தலைவர் பிச்சை துணை தலைவர் செந்தில் மாநில உதவித்தலைவர் உதவி செயலாளர் பிரசன்னதேவநாதன் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்