விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ் ராமலிங்கபுரம் பகுதியில் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களின் வீடுகளில் யாராவது இறந்தால் இந்த சுடுகாட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சுடுகாடு சேதமடைந்து எப்பொழுது விழுமோ என்ற நிலையில் உள்ளது இந்த சுடுகாடு சரி செய்வது புதிய சுடுகாடு கட்டுவதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் பணிகள் தொடராமல் இருப்பதால் சுடுகாட்டில் இறுதிச் சடங்குக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதை கவனம் செலுத்தி உடனடியாக இந்த புதிய கட்டிடம் கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
