விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்ட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் ஒரு தொழிலாளி பலி ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் .
வெடிவிபத்தில் 15 பட்டாசு தயாரிக்கும் அறைகள் முழுமையாக தரைமட்டமாயின .

விபத்து நடைபெற்ற இடத்தை தேமுதிக மாநில துணை செயலாளர் சந்திரன், தேர்தல் பிரிவு செயலாளர் தாமோதர கண்ணன், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சையது காஜா செரீப், கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மும்தாஜ், மாவட்ட ,நகர, ஒன்றிய, தேசிய முற்போக்கு திராவிட கழக கிளைக் கழக நிர்வாகிகள் விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டனர்.
