விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா, பயனாளிகளுக்கு வழங்கி புதிய வீடுகளை பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று(07.07.2025) விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கண்டியாபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், ரூ.12.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 232 புதிய குடியிருப்பு வீடுகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, புதிய குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா பயனாளிகளுக்கு வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.கே.கனகராஜ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் கலைவாணி, தனி வட்டாட்சியர்(அயலகத் தமிழர் நலன்) கார்த்திகேயினி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெய பாண்டியன், கிருஷ்ணகுமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
