200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும், இதுவரை எந்த கட்சியிலும் சேராத இளைஞர்கள், அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.
அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கரை முருகன் செய்திருந்தார்.