புதுக்கோட்டை மாவட்ட மாமன்னர் ரேசிங் பீஜியன் அசோசியேசன் (பதிவு என் எஸ் ஆர் ஜி 58/2023) சார்பில் நடத்தப்படும் சாதா புறா கர்ண புறா கூட்டுப்போட்டிகள் ஜூன் மாதம் 6ஆம் தேதி மதிப்பிற்குரிய எங்கள் அண்ணன் விஜய் ரவி பல்லவராயர் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது.
சங்கத்தில் மொத்தம் 20 புறா கலைஞர்கள் உள்ளனர். இன்று 4/7/2025 மூன்று சாதா புறா பந்தயம் காலை 7 மணிக்கு துவங்கப்பட்டது. இதில் மொத்தம் 8 உறுப்பினர்கள் தங்கள் புறாக்களை பறக்க விட்டு பங்கேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கும் இந்த பந்தயத்தில் மூன்று நாட்களும் 7 மணி நேரம் பறந்து இறுதியாக அமரும் புறாக்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த கூட்டு போட்டிகள் இந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி நிறைவடையும். இந்தப் புறா பந்தயத்தை காண வந்த நண்பர்கள், சகோதரர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்க சங்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.