பழனி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகன் கோயிலுக்கு திரைப்பட நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் நயன்தாராவை மலைக் கோயிலுக்கு போலீஸார் அழைத்து வந்தனர். குழந்தைகளை மலைமீது இருந்த படியை தொட்டு வணங்க கூறிய பின்னர் விக்னேஷ் சிவன் அழைத்து சென்றனர். குழந்தை மலைக் கோயிலில் சிறப்பு தரிசன வழியில் சாமி தரிசனம் செய்ய நயன்தாராவை கோயில் ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

அதேபோல் சாமி தரிசனம் முடித்து பஞ்சாமிர்த பிரசாதம் வாங்கி நயன்தாரா தனது குழந்தைக்கு ஊட்டிவிட்டார். சாமி தரிசனம் முடித்து கோயில் நிர்வாகம் சார்பில் நயன்தாராவிற்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நயன்தாராவை பார்ப்பதற்காக பக்தர்கள் பலரும் சூழ்ந்து கொண்டதால் மலைக்கோயில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் மூக்குத்தி அம்மன்2 படபிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.
