கையாலாகாத மக்கள் விரோத ஸ்டாலின் திமுக அரசு ராஜினாமா? செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் குரலாக உள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரை 27ஆம் தேதி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் தாக்கியதிலே அவர் இறந்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் 2021 முதல் தற்போது வரை 25 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்துள்ளனர்.

ஆனால் முதலமைச்சர் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சமாக இன்றைக்கு பார்க்கப்படுகிறது ,கொலை செய்தது உங்கள் அரசு, ஆனால் சாரி என்பதுதான் உங்கள் பதிலா?
அஜித்குமார் இருந்திருந்தால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்திருக்கும் அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு தைரியமாக இருங்கள் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதலமைச்சருக்கு?
முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே என்கிற கவலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது?
என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன் என்று சொல்லுகிறீர்களே? போன அப்பாவி அஜித் குமார் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா?

வேறென்ன செய்து விடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களின் போது உறவினர்களை அஞ்சலி செலுத்தக்கூட விடாமல், காசை கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்கள், அதே போன்ற முயற்சி தானே இதுவும் தானே இங்கேயும் நடக்கிறது.
அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்ற விசாரித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பிறகு எப்.ஐ.ஆர்.கைது எல்லாம் நடந்திருப்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா ?அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?
நடக்க கூடாதது நடந்துடுச்சு என்று சொல்ல உங்களுக்கு நா கூச்ச வில்லையா உங்களுக்கு? இது என்ன முதல்முறையாக உங்கள் ஆட்சி நடந்திருக்கிறதா இதுவரை 25வது முறை லாக் அப் மரணம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது .
இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோ சூட் காட்சியை சாட்சி என்று எடப்பாடியார் ஆணித்தரமாக இந்த ஸ்டாலினுடைய அலட்சியப் போக்கை தோலுரித்து காட்டியிருக்கின்றார்கள்.
ஆகவே தமிழக மக்கள் 10 கேள்வியை எழுப்பி உள்ளார்கள் முதல் கேள்வியாக தனிப்பட்ட போலீசார் தானாகவே முன்வந்து ஏன் விசாரிக்க வேண்டும்? அவர்களை விசாரிக்குமாறு உத்தரவிட்டது யார் யார் அந்த விஐபி என்பதுதான் தமிழ்நாட்டு முதல்மக்கள் கேள்வி?
திருட்டு வழக்கில் போலீசார் விசாரிக்க உரிமை உள்ளது ஆனால் எதற்கு தாக்கினார்கள் என்பது தான் தமிழ்நாடு மக்களின் இரண்டாவது கேள்வி?
குற்றம் சாட்டப்பட்ட நபர் வேறு இடத்தில் இருந்தால் தனிப்படை போலீசார் விசாரிக்கலாம் ஆனால் போலீஸ் ஸ்டேஷன் இருந்த போது ஏன் தனிப்படை விசாரிக்க வேண்டும் இது தான் மூன்றாவது கேள்வி?
எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் இது தான் 4வது கேள்வி? மக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது இது தான் 5 வது கேள்வி?
அஜித் குமாரை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளார்கள் உண்மையா இல்லையா இது 6 வது கேள்வி? அஜித்குமார் மீது மிளகாய் பொடி தூவி கொடூரமாக தாக்கி உள்ளனர் உண்மையா இல்லையா இது 7வது கேள்வி?
சாதாரணமாக கொலை செய்யும் கூலிப்படை கூட இது போன்ற கொடூரமாக செயலில் ஈடுபட வாய்ப்பு இல்லை உண்மையா இல்லையா இது 8வது கேள்வி?

போலீஸ் பிடியில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்ததற்கு அரசு பொறுப்பு என்பதை மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் உண்மையா? இல்லையா இது போன்ற 10 கேள்விகளை தான் மக்கள் மன்றம், நீதிமன்றம் தமிழ்நாட்டு மக்கள் கேட்டுள்ளார்கள்.
காவல்துறை இன்றைக்கு அஜாக்கிரதையாக பணியாற்றி இந்த கொலைக்கு காரணமாக இருந்ததற்கு என்று ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த காரணத்தால் அஜித் குமார் என்ற இளைஞர் உயிரிழப்புக்கு முதல் குற்றவாளியாக காவல்துறை கையில் வைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு ?
ஆகவே அவருடைய கையாலாக அரசு மரணங்களை தொடர்ந்து நடத்தி இருக்கிறது.
கையாளாகாத அரசை நடத்தும் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் ?பதவி விலக வேண்டும்? இதில் முதல் குற்றவாளி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது தமிழ்நாடு மக்களின் தீர்ப்பு. இதற்கு அவர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை என்றால், மக்கள் தருவார்கள் தகுந்த தீர்ப்பு. இதுதான் ஆண்டவன் தீர்ப்பு. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு ஆகவே ஸ்டாலின் ஆட்சி வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது என கூறினார்.